Followers

Monday 22 February 2016

இந்தோனேசியாவின் விநாயகர் தீவு


இந்தோனேசியாவின் விநாயகர் தீவு




இந்தோனேசியாவின் பாலித் தீவிற்கு அருகாமையில் ‘மெஞ்சாங்கன்’ எனும் ஓர் அழகிய குட்டித் தீவு அமைந்துள்ளது. இந்த தீவிற்கு ‘கணேஷர் தீவு’ என்ற இன்னொரு பெயரும் உள்ளது. அதற்கு காரணம் இந்த தீவில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான விநாயகர் திருக்கோயில் தான். இந்தோனேசியாவின் மிகப் பழைமையான இந்துகோவில்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்கோயில்.



இந்த தீவில் மொத்தம் எட்டு கோவில்கள் உள்ளன. அவற்றுள் சேகர கிரி தர்ம காஞ்சன ஆலயம் மிகவும் புகழ்ப்பெற்றது. தற்போது இந்த தீவில் மனிதர்கள் வாழவில்லை என்றாலும் தினந்தோறும் இந்துக்கள் இந்த தீவின் கோவில்களைத் தரிசித்து வழிபாடு மேற்கொள்கின்றனர். இந்த தீவில் அமைந்திருக்கும் திருக்கோயில் மிகவும் சக்திவாய்ந்த கோயில் என நம்பப்படுகின்றது. இந்தோனேசியாவின் பல பயங்கர எரிமலை தாக்குதல்கள் மற்றும் நிலநடுக்கங்கள் ஆகியவற்றையும் மீறி இக்கோயில் நிலைத்து நிற்கின்றது. இந்த தீவிற்கு அருகாமையில் ‘லெத்கொல் விஸ்ணு’ எனப்படும் ஒரு விமான நிலையமும் அமைந்துள்ளது.




மேலும் கோவிலின் சிற்பங்களும் பல அரிய பொக்கிஷங்களும் கடலுக்குள் மூழ்கி கிடக்கின்றன. இவை ‘அண்டர்வாட்டர் டெம்பல்’ எனவும் அழைக்கப்படுகின்றன. கடல் நீர்மட்ட உயர்வால் இத்தீவின் கரையோர பகுதிகளில் இருந்த ஒருசில கோவில்கள் தற்போது நீருக்குள் மூழ்கிவிட்டன.



தீவின் கோவில்களில் இந்துதர்மத்தைச் சார்ந்த பெரிய திருவுருவங்களும் அமைந்துள்ளன.











முக்கியமான சமய திருநாட்களில் இந்தோனேசியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்துதர்ம பெருமக்கள் இத்தீவின் கோவில்களுக்குப் புனித யாத்திரை மேற்கொள்வர்.

No comments:

Post a Comment